0

தமிழ்க் கணிமை கருத்தரங்கம் (28-8-2010)

கணினியும் இணையமும் இரு கண்களாகிக் கொண்டிருக்கும் வேளையில் இக்கருத்தரங்கத்திற்கான நோக்கம் யாதெனில் தமிழில் நிறைய கட்டற்ற மென்பொருட்களைக் கொணர்தலும் இணையத்தில் தமிழ்ப்பயன்பாட்டை அதிகரித்தலும் ஆகும். இதற்காகப் பல பணிகள் செம்மையாக உலகின் பல இடங்களில் பல்வேறு அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆகஸ்ட் 28ந் தேதி அன்று தமிழ்க்கணிமை கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்த்தொண்டாற்ற விருப்பமுள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். இதில் ஒவ்வொருவரின் செம்மையான பங்கும் யாதெனில் தமிழ்க்கணிமைப் பயன்பாட்டிற்கான பணித்திட்டங்களில் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்வதாகும்.

இக்கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள / உரையாற்ற விரும்புவோர் இங்கு பதிவு செய்யவும்.

எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வம்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

என்று பாரதியார் நமக்கிட்ட கட்டளையை நிறைவேற்றுவோம்.

Leave a Reply

Copyright © 2012 — Computer Society of MIT | Earthly theme by Trevor Fitzgerald